குளிக்கும் போது வீடியோ கால்..கணக்கு மாஸ்டர் நடத்திய பாலியல் பாடம் : பள்ளி மாணவி விபரீத முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan18 January 2025, 7:18 pm
வேலூர் கொணவட்டம் மதினாநகரை சேர்ந்தவர் முகமது சானேகா (வயது 35). வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் 10-ம் வகுப்பு மாணவியிடம் செல் போனில் புகைப்படம் அனுப் பும்படியும், வீடியோ கால் செய்யும்படியும் கட்டாயப்படுத்தி அவ்வாறு செய்யாவிட்டால் தேர்வில் சரியாக மதிப்பெண் வழங்க மாட்டேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்
இதையும் படியுங்க: துணை நடிகர்களான இரட்டையர்கள் கைது… போதையில் போலீசாருக்கே மிரட்டல்!
அதனால் பயந்துபோன மாணவி தனது புகைப்படங்களை அனுப்பி வைத்து, வீடியோ காலிலும் பேசி உள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய ஆசிரியர் பள்ளியில் வைத்து மாணவிக்கு அடிக்கடிபாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது
இந்த நிலையில் முகமது சானேகா மாணவியிடம் குளிக்கும்போது வீடியோ கால் செய்ய வேண்டும் என் றும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை தெரிவிக்கும்படி யும் கூறி இதனை செய்யாவிட்டால் தேர்வில் மதிப்பெண் வழங்க மாட்டேன் என்றும் மிரட்டி உள்ளார். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த தூக்க மாத்திரைகளை சாப்பிட முயன்றுள்ளார்.
இதனை கவனித்த தாயார் இதுபற்றி மாணவியிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியரால் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து அழுதபடி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து நேற்று வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் தமிழரசி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து முகமது சானேகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்