தனியார் கல்லூரி பேருந்துகளில் மளமளவென குறைந்த டீசல்… சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி ; போலீஸில் பரபரப்பு புகார்..!!!

Author: Babu Lakshmanan
20 December 2023, 8:54 pm

நாட்றம்பள்ளி அருகே பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் 630 லிட்டர் டீசல் திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக மாலை நேரங்களில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமாகக் கொண்டு இருந்த நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பேருந்துகளை பஸ் நிலையத்தில் நிறுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நான்கு பேருந்துகளில் 630 லிட்டர் டீசல் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேபோல, பொன்னேரி குனிச்சி திருப்பத்தூர் கசிநாயக்கன்பட்டி பகுதிகளிலும் இரவு நேரங்களில் நிறுத்தி வைக்கப்படும் பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் மர்ம நபர்கள் டீசல் திருடி செல்வது குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

https://player.vimeo.com/video/896570852?badge=0&autopause=0&player_id=0&app_id=58479

காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகார் பெறுவதில்லை என்றும், பள்ளி கல்லூரி பேருந்து ஓட்டுநர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. எனவே, மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!