அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்துகள்… தனியார் பள்ளி வளாகத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணை..!!

Author: Babu Lakshmanan
18 October 2022, 12:57 pm

காஞ்சிபுரம் ; சுங்குவார்சத்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களை ஏற்றிச் செல்ல 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

bus fire - updatenews360

தொடர்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பள்ளி பேருந்துகளிலும் தீ பரவியது. இதையடுத்து, விபத்து குறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீ இணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மளமளவென கொளுந்து விட்டு எரிந்து வந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

bus fire - updatenews360

இருப்பினும், 3 பள்ளி பேருந்துகளும் முற்றிலும் எரிந்து தீயில் கருகி நாசமனது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் பேருந்து பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதா..? அல்லது வேறு ஏதேனும் காரணமா..? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!