பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திருப்பம்… தமிழாசிரியரைத் தொடர்ந்து பள்ளி தாளாளரும் கைது…!!

Author: Babu Lakshmanan
8 July 2022, 4:12 pm

தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அந்தப் பள்ளியின் தாளாளரும் கைது செய்யப்பட்டிருப்பது கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில் தனியார் மெட்ரிக் (காவிரி) பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இதில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஒருவருக்கு 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தமிழ் ஆசிரியர் நிலஒளி போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவியின் வாக்குமூலத்தில் மேலும் பள்ளி தாளாளர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழாசிரியர் போலவே, பள்ளி தாளாளரும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் குளித்தலை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பள்ளி தாளாளர் யுவராஜை கைது செய்து அழைத்து சென்றனர். இது பள்ளியின் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி