2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோருக்கு தனியார் பள்ளி மிரட்டல்.. TC வாங்க மிரட்டி ஒப்பந்தம்!
Author: Udayachandran RadhaKrishnan5 April 2025, 4:27 pm
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி வர படிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஆசிரியர்கள் .
இதையும் படியுங்க: தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு… குற்றவாளிகளுக்கு பரபரப்பு நீதிமன்றம் உத்தரவு!
மேலும், இதே போன்று தொடர்ந்தால் மாணவியை பள்ளியில் இருந்து வெளியேற்ற டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (TC) வாங்கிக் கொண்டு பெற்றோர்களே அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிரட்டல் விடுத்து முத்திரைத் தாளில் ஒப்பந்தம் ஒன்றை பெற்றோர்களிடம் இருந்து வாங்கி உள்ளனர் அந்தப் பள்ளி ஆசிரியர்கள். இந்த சம்பவம் கோவையில் உள்ள பெற்றோர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவிலா பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு படிப்பு சரியாக வரவில்லை என்று பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டி உள்ளது.மாணவியின் பெற்றோரிடம் பெறப்பட்ட முத்திரைத் தாளில் ஒப்பந்தத்தில், இதே நிலை தொடர்ந்தால், மாணவியை பள்ளியில் இருந்து வெளியேற்ற டிரான்ஸ்பர் சர்டிபிகேட் வாங்கிச் தாங்களாகவே அழைத்துச் சென்று விடுவோம் என பாண்டு பேப்பரில் எழுதி கையெழுத்து பெற்றுக் கொண்டு உள்ளனர்.

மாணவியின் எதிர்காலம் கருதி, பள்ளி நிர்வாகம் இத்தகைய முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் பெற்றோர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டாம் வகுப்பு மாணவிக்கு இதுபோன்ற கடுமையான நடவடிக்கை தேவைதானா ? என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இது மாணவியின் மன நிலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பெற்றோர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
பள்ளி நிர்வாகம் மாணவியின் கற்றல் குறைபாடுகளை சரி செய்ய மாற்று வழிகளை கையாண்டு இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது கல்வித் கற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியே ஏற்படுத்தி உள்ளது.
