படவாய்ப்பிற்காக எல்லை மீறும் பிரியா பவானி சங்கர்.? அப்செட்டில் நீண்ட வருட காதலர்..!

Author: Rajesh
9 April 2022, 11:16 am

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிலிருந்து இவர் அந்தப் படத்தின் ஹீரோ ஹரிஷ் கல்யாணுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். பொது இடங்களிலும், பட விழாக்களிலும் இவர்கள் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு வருகின்றனர். அதில் இருவரும் மீடியாவுக்கு ஜோடியாக போஸ் கொடுப்பது கேலி கிண்டல் செய்வது என்று கலகலப்பாக இருக்கும் வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருகிறது.

தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் சற்று குண்டாக இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது தன் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார். மேலும் தன்னுடைய அழகை மெருகேற்றும் முயற்சியில் அவர் தீவிரம் காட்டி வருவதால் ஜிம் கோச் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்கிறாராம். 

இத்தகைய அவருடைய போக்கினால் பிரியாவின் நெடுநாள் காதலர் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரியா ஒருவரை காதலித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது அவர் ஹரிஷ் கல்யாண், ஜிம் கோச் இவர்களுடன் அதிக நெருக்கம் காட்டி வரும் செய்திகள் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மனமுடைந்து போன காதலர் அதற்கான காரணம் தெரியாமல் குழம்பி வருவதாக கூறப்படுகிறது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 2916

    32

    19