கிளாமர் நெருக்கடிக்கு தள்ளப்படும் தமிழ் நடிகைகள்.? ஓபனாக பேசிய நடிகை பிரியா மணி..!

Author: Rajesh
27 June 2022, 4:34 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பிரியா மணி. இவர், தமிழ் சினிமாவில் “கண்களால் கைது செய்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பக்கா கிராமத்து பெண்ணாக நடித்த பிரியாமணியின் நடிப்பு பாராட்டை பெற்றது. பருத்திவீரன் படம் பிரியாமணிக்கு இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

10 திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரியமாமணிக்கு ஒரு கட்டத்திற்கு மேல், திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போக, முஸ்தப்பா ராஜ் என்பவரை 2017 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர்கள் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பின், அசுரன் பட ரீமேக் படத்தில் நடித்தார். இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே சிறந்த படமாக அமைத்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள்.இதை தொடர்ந்து அட்லீ ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்திலும் நடித்து வருகிறாராம், மேலும் சில பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.

இந்த நிலையில், தமிழ் சினிமாவின் நடிகைகள் சந்திக்கும் சவால்கள் குறித்து நடிகை பிரியா மணி மனம் திறந்து பேசியுள்ளார். ”பாலிவுட் நடிகைகளுக்கு இயற்கையிலேயே உடல் வாகு கட்டுக்கோப்பாகவும், நிறம் வெண்மையாகவும் இருக்கும் அதனால் அவர்களுக்கு கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை. இதனை புரிந்து கொள்ளாமல் தமிழ் நடிகைகள் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது ” என்று ஒரு பேட்டியில் அவர் கூறினார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்
  • Close menu