தனுஷ்-க்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரியங்கா மோகனுக்கு பதில் இந்த இளம் நடிகையா.?

Author: Rajesh
5 June 2022, 5:25 pm

தனுஷ் நடிப்பில் தற்போது திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இவருடைய நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன் ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தனுஷ் – அருண் மாதேஸ்வரன் இணையும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாம்.

ஆனால், பிரியங்கா மோகனின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைக்க திட்டமிட்டு வருகிறார்களாம் படக்குழு என தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது சூர்யா நடித்து வரும் சூர்யா 41 படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வெளிவந்தால் தனுஷ்-க்கு செம்ம அதிர்ஷ்டம் தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசி கொள்கிறார்கள்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!