கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே 1.9 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலக்காடு ரோடு மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் இறங்கு தளம் அமைக்க பில்லர் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே இணைப்பு பகுதிக்கான வேலைகள் நடக்கிறது. பகல், இரவு நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் 3 கி.மீ தூரம் வரை காத்திருந்து ஆத்துப்பாலத்தை கடக்க வேண்டியிருக்கிறது.
உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள், பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோட்டில் இருந்து உக்கடம் நோக்கி வரும் வாகனங்கள் நெரிசலில் திணறுவது வாடிக் கையாகி விட்டது.
வாகன நெரிசல் காரணமாக இந்த பகுதியில் மேம்பால பணி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கான்கிரீட் பாலங்கள், இரும்பு பொருட்கள், ஜல்லி, சிமெண்ட் கொட்ட இடம் இன்றி பணி நடத்துவோர் திணறுகின்றனர்.
மேம்பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இடவசதியின்றி பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். பணி நடத்தும் போது வாகனங்களை அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாகனங்களை மாற்றுப்பாதையில் விட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்ட போது, இரு பிரதான ரோட்டில் இருந்து அதிக வாகனங்கள் வந்து செல்கிறது. செல்வபுரம் பைபாஸ், புட்டுவிக்கி ரோட்டில் வாகனங்கள் சென்று வரலாம்.
ஆனால் இங்கே பெரும்பாலான வாகனங்கள் செல்லாமல் 3 கி.மீ தூரத்தை மிச்சமாக்க பல நிமிட நேரம் போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நிலை இருக்கிறது.
கனரக வாகனங்கள் இலகுரக வாகனங்கள் பூட்டி வைக்கிற ரோட்டில் சென்று வரும் திட்டம் பாலம் கட்டும் பணி தொடங்கும் போது இருந்தது அப்போது போக்குவரத்து பிரச்சினை ஓரளவுக்கு சமாளிக்கப்பட்டது.
இப்போது நிலைமை கைமாறி போய்விட்டது. கடும் நெரிசல் காரணமாக பகல் நேரத்தில் பணி நடத்த முடியவில்லை. இரவு நேரத்திலும் வாகனங்கள் புரிந்து இருக்கிறது. எப்படி பாலத்தின் இறங்கு தளம் பணிகளை நடத்துவது என தெரியாமல் தவிக்கிறோம் வாகனங்களை மாற்றுப் பாதையில் விட்டால்தான் குறித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியும் என்றார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.