யூடியூப் புகழ் கரகாட்ட கலைஞர் பரமேஸ்வரிக்கு எதிராக ஊர்வலம் : நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 April 2023, 7:39 pm

மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 29) என்ற பெண் கரகாட்ட கலைஞர். இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தற்போது அவரது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பல்வேறு கரகாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு  ஆடிவருகிறார். அந்த வீடியோக்களை பேஸ்புக் , இன்ஸ்டா, மற்றும் PATTAMPOOCHI என்ற யூடியுப் ரீல்ஸ் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டுவருகிறார்.

இந்நிலையில் பரமேஸ்வரிக்கு சமூகவலைதளங்கள் மூலமாக பிரபலமானார். இந்நிலையில் பரமேஸ்வரி கரகாட்டம் என்ற பெயரில் கரக கலைக்கு எதிராக செயல்படுவதாகவும், நையாண்டி கலைஞர்கள் இன்றி கரகாட்டம் ஆடுவதால் நையாண்டி கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் பரமேஸ்வரி கரகாட்டம் ஆடும்போது சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையிலான கொடிகளை கட்டி ஆடுவதால் மோதல் ஏற்படும் நிலை உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து பரமேஸ்வரிக்கு எதிராக புகார் அளித்தனர்.

இந்நிலையில் பரமேஸ்வரி சினிமா பாடல்களுக்கு கரகாட்டம் ஆடுவதால் கரக கலைக்கு எதிராக செயல்படுவதாகவும் , பரமேஸ்வரி மீது காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க கோரியும், பரமேஸ்வரி தொடர்பான யூடியுப், ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இணைய தள பக்கங்களை தமிழக அரசு முடக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், மேளக்கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள்,அகில இந்திய கலைக்குடும்பங்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான கரகாட்ட கலைஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினா்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1047

    0

    0