“அந்த படம் தலை தெறிக்க ஓடும்.. நான் இழந்த பணத்தை திரும்ப பெற்றுவிடுவேன்”: நானே வருவேன் தயாரிப்பாளர் நம்பிக்கை ..!

தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவான நானே வருவேன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகின்றது. ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் கூட்டணியான செல்வராகவன் மற்றும் தனுஷ் மயக்கம் என்ன படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர்.

அதன் காரணமாகவே இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பல பேட்டிகளை கொடுத்துவருகின்றார்.

அந்த வகையில் ஒரு பேட்டியில் கமலின் ஆளவந்தான் படத்தைப்பற்றி பேசியுள்ளார் தாணு. கடந்த 2001 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலின் கதை மற்றும் திரைக்கதையில் உருவான ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான அப்படம் லாபகரமான படமாக அமையவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய தாணு, அன்று வெளியான ஆளவந்தான் திரைப்படத்தில் கமலின் திரைக்கதை தவறாகிவிட்டது.

எனவே இன்று ஆளவந்தான் திரைப்படத்தை டிஜிட்டல் முறையில் தயார் செய்து 2 மணி நேர படமாக வெளியிட்டால் தலை தெறிக்க ஓடும். அதன் மூலம் நான் இழந்த பணத்தை கூட திரும்ப பெற்றுவிடுவேன் என்றார் தாணு.

Poorni

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

21 minutes ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

23 minutes ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

1 hour ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

3 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

3 hours ago

This website uses cookies.