இதுல INVEST செய்தால் PROFIT : கவர்ச்சி விளம்பரங்களை கொடுத்து பல லட்சும் சுருட்டிய பலே கில்லாடி கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 February 2023, 1:29 pm

கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் ரோட்டில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது.

பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தினார்.
‘முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்’ என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.

அவர்களுக்கு அசல், வட்டி எதுவும் தராமல் பாலச்சந்திரன் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார்கள் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையிலே எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பீளமேடு நேரு நகர் நான்காம் மேற்கு வீதியை சேர்ந்த கணேசன் (வயது 51) என்பவர் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

தான் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதற்கு அசல், வட்டி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல் துறையினர் பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது வழக்கு பதிந்தனர்.

நிதி நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரனை கைது செய்த போலிஸார் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…