கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… இன்னும் 20 நாட்களில் : சென்னை மக்களுக்கு அமைச்சர் உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2023, 9:30 pm

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… இன்னும் 20 நாட்களில் : சென்னை மக்களுக்கு அமைச்சர் உறுதி!!!

திருவள்ளூர், மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் 100 எம் எல் டி ஆலையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு அமைச்சர் ஆர் காந்தி எம்பி ஜெயகுமார் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர் கோவிந்தராஜன்
கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர்.

சென்னை புறநகர் பகுதியான மீஞ்சூர் செம்பரம்பாக்கம் புழல் சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீரை முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க அறிக்கை தயார் செய்து முதலமைச்சர் உடன் பேசி வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மீஞ்சூர் பொன்னேரி அனுப்பம்பட்டு சுற்று வட்டாரங்களில் உப்பு நீர் கலந்து வருவதை தடுக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

காட்டுப்பள்ளி 100 எம் எல் டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையில் உபகரணங்கள் அனைத்தும் பழுதாகி விட்டன என்றும் 50 எம் எல் டி மட்டுமே குடிநீர் உற்பத்தி நடைபெறுவதாகவும் விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து பழுதுகள் சரி செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளது என்றும் பூண்டி புழல் நீர் தேக்கங்களில்
13 டிஎம்சி கொள்ளளவில் தற்போது 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது என்றும், 1000எம் எல் டி சென்னை குடிநீருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் 20 நாட்களில் 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையிலிருந்து தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் பணிகள் துவங்க உள்ளது என அவர் தெரிவித்தார்..

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ