கோவை: கோவை அருகே தெரு நாயை அடித்து கொடூரமாக கொலை செய்தவர் மீதும் அவரது தாய் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை வடவள்ளியை அடுத்த வீரகேரளம் பகுதியில் உள்ள கே.கே.நகரில் அதிகளவிலான மக்கள் வசித்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக இந்த பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி மக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.
இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்க கூடிய வாலிபர் ஒருவர், தன் வீட்டு முன்பு சுற்றி திரியும் தெருநாயை பிடித்து, வீட்டில் உள்ள கட்டையை எடுத்து, சரமாரியாக தாக்கினார். இதில் நாய் வலி தாங்க முடியமால் அலறி அடித்து கொண்டு ஓட முயற்சிக்கிறது. ஆனால் விடாமல் அந்த நாயை துரத்தி சென்று பிடித்து தலையில் அடித்தார். இதனால் சிறிது நேரத்தில் அந்த நாய் இறந்து விட்டது.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த நபர் நாயை தரதரவென இழுத்து சென்று சாலையோரம் வீசி விட்டு சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதனை பார்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் நாயை தாக்கிய நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் நாயை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் மினி என்பவர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணையில் நாயை தாக்கி அடித்து கொன்றது, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த தொழிலாளியான பாலு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பாலு மற்றும் அவரது தாயார் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
தயாராகி வரும் கொண்டாட்டங்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
திருச்சி நீதிமன்றத்தில் வருண் குமார் தொடுத்த வழக்கில் இன்று ஆஜராக வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.…
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரண்டாவது மகன் மார்க் ஷங்கர் (வயது 8) சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில்…
This website uses cookies.