பிரபல நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்… இளம்பெண் நடத்திய பாலியல் தொழில் : காஞ்சியில் ஷாக்!!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2025, 5:01 pm
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ‛ஹெவன் கேட்’ எனும் தனியார் 3 star ஹோட்டல் உள்ளது. இங்கு, பெண்களை வைத்து, பாலியல் தொழில் செய்து வருவதாக, ஸ்ரீபெரும்புதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்க: பீரோவுக்கு அடியில் கிடந்த கட்டப்பை.. ரத்தப்போக்குடன் கிடந்த மகள்.. அடுத்து நடந்த திருப்பம்!
அதன்படி போலீசார் நட்சத்திர ஹோட்டலில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஹோட்டலில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த சென்னையை சேர்ந்த காயத்திரி, 30, என்பரை கைது செய்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த 5 பெண்களை மீட்டு, சென்னையில் உள்ள மகளிர் கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.
மேலும் இதே போல ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் ஸ்பா என்கின்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.