எந்த பொண்ணு வேணும்? ரகம் ரகமா இருக்கு.. களைகட்டிய விபச்சாரம்.. புரோக்கருடன் சிக்கிய 4 பேர்!
திருப்பூர் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரம் ஆகும். இங்கு தமிழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வட மாநிலத்தவர்களை சார்ந்தவர்களும் என சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தில் இருந்து பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்காக வருபவர்களை குறிவைத்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபம் அருகில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்த பொழுது அந்த வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்டதாக தெரியவந்தது.
தொடர்ந்து வீட்டில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாரோகான் என்பவரும் வாடிக்கையாளர்களாக சென்ற இளங்கோ,உதயகுமார்,முருகேசன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இரண்டு பெண்களையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பின்னலாடை நிறுவனத்திற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் வந்தது தெரிய வந்தது.
மேலும் இரு பெண்களும் கூறுகையில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வந்ததாகவும் சாரூக்ஹான் என்பவர் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறினர்.
தொடர்ந்து விபச்சார புரோக்கர் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் காவல்துறையினர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
சச்சின் ரீரிலீஸ் 2005 ஆம் ஆண்டு விஜய் கதாநாயகனாக நடித்து வெளியான “சச்சின்” திரைப்படம் கடந்த 18 ஆம் தேதி…
ஹைதராபாத்தை சேர்ந்த சாய் சூர்யா டெவலப்பர்ஸ், சுரானா ஆகிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிகர் மகேஷ்பாபு நடித்திருந்தார். இதையும்…
This website uses cookies.