ஆர்எஸ் பாரதி பேச்சுக்கு எதிர்ப்பு… பழனியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற பெண் அதிரடி கைது!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 2:13 pm

பழனி ஆர். எஸ் பாரதியை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதியை போலீஸாரால் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் முன்பாக இந்து சஷ்டி சேனா நிறுவன தலைவி சரஸ்வதி உண்ணாவிரதம் இருக்க முயன்ற போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- கடந்த 14ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டிஎம்கே பைல்ஸ் என்ற திமுகவினர் மீதான சொத்து பட்டியல் அடங்கிய குறும்படத்தை வெளியிட்டார்.

இது குறித்து திமுகவைச் சேர்ந்த ஆர் எஸ் பாரதி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பின்போது ஆடு தானாக சிக்கி உள்ளதாகவும் மஞ்சள் தெளித்து வெட்டி விட வேண்டும் எனவும் கூறியதாகவும், இதனை கண்டிப்பதாகவும் கூறி உண்ணவிரதம் இருக்க முயன்ற போது காவல் துறையினரால் அதிரடி சரஸ்வதியை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் கோவில் முன்பாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!