மடை வெட்ட எதிர்ப்பு.. கையில் அரிவாளுடன் மதுரை வீரனாய் மாறி பொங்கி எழுந்த விவசாயி : அதிர்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2023, 6:24 pm

மடை வெட்ட எதிர்ப்பு.. கையில் அரிவாளுடன் மதுரை வீரனாய் மாறி பொங்கி எழுந்த விவசாயி : அதிர்ச்சி சம்பவம்!!

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி அருகே கள்ளிக்குடி கிராமத்தில் நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் கண்மாய் ஒன்று உள்ளது.

இந்த கண்மாய் தமிழ்நாடு நீர் வளத்துறை (PMKSY – RRR Phase-vI) திட்டத்தில் சுமார் ரூ. 99.50 லட்சம் செலவில் மராமத்து பணிகள் பல மாதங்களாக நடந்து வருகிறது.

இதில் இந்த கண்மாய்க்கு உள்ள 5 மடைகளும் புதுப்பிக்கும் பணி நடந்து வரும் நிலையில். 5 வது மடை புதுப்பிக்கும் போது அதே பகுதியைச் விவசாயி பாரதி திடீரென்று அந்த மடை அவரது பட்டா நிலத்தில்  இருப்பதாக கூறி  மடை புதுப்பித்தல் பணியை நிறுத்தும் நோக்கத்தில் கையில் அரிவாளை வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் வீண் சண்டையிட்டு உள்ளார்,

மடை இருப்பது தனது பட்டா நிலத்தில் என கூறி கையில் அருவாளோடு பொதுமக்களை மிரட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸார் விவசாயியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!