ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி ராக்கெட் திண்டுக்கல் வந்ததால் பரபரப்பு : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 10:40 am

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ராக்கெட் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பறந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்றுப்பகுதியில் விண்ணில் ஆச்சரியமூட்டும் வகையில் தீப்பிழம்புகள் கொட்டி வானூர்தி ஒன்று சென்றது. இதைப் பொதுமக்கள் ஆச்சரியமாக அச்சத்துடன் பார்த்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவானில் இருந்து 3 செயற்கைக் கோள்களை எடுத்துக் கொண்டு விண்ணுக்கு செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-52 ESO-04 ராக்கெட் என்பது தெரியவந்தது .

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லட்சுமணம்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது தொலைபேசியில் பதிவு செய்து பதிவான காட்சிகள் விண்ணில் பறக்க பட்ட சில விநாடிகளில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1032

    0

    0