பரபரப்பை கிளப்பிய பிடிஆர் ஆடியோ விவகாரம்.. கிரீன் சிக்னல் காட்டிய ஆளுநர் : பாஜக மாஸ்டர் மூவ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 April 2023, 8:05 pm

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாக பேசியிருந்ததாக கூறப்படும் ஒலி நாடாவின் (ஆடியோ) உண்மை தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக் கோரி பாஜக தலைவர்கள் குழு கவர்னர் ஆர்.என்.ரவி சந்திக்கும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் குழு இன்று சந்தித்தது. இந்த சந்திப்பின்போது நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோவின் உண்மை தன்மையை கண்டறிய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை விடுத்தனர்.

ஆடியோவில் உள்ள குரல் யாருடையத என விசாரிப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் ஆர்.என்.ரவியை பாஜக தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர்.

  • kamal haasan ott streaming after 8 weeks கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?