மேம்பாலத்தின் கீழ் ஏற்பட்ட திடீர் தீ.. கடும் புகையால் பலருக்கு மூச்சுத்திணறல்..!

Author: Vignesh
28 August 2024, 4:57 pm

இருகூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

திருச்சி சாலையில் இருந்து இருகூர் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருகூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சிலர் குப்பைகளைக் கொட்டி வந்ததாகத் தெரிகிறது.


அந்த குப்பை குவியலில் இன்று திடீரென தீப்பிடித்து. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியதில் மேம்பாலத்தை கரும்புகை சூழ்ந்தது. இதனால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். மக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெறுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 250

    0

    0