குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: வாழையை சேதப்படுத்தி அட்டூழியம்…அச்சத்தில் உறைந்த குன்னூர் மக்கள்..!!(வீடியோ)

Author: Rajesh
15 April 2022, 9:51 am

நீலகிரி: குன்னூர் குடியிருப்பு பகுதிக்குள் காட்டுயானைகள் நுழைந்து வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளை சேதப்படுத்தியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஒரு மாதமாக ரன்னிமேடு, கிளன்டேல், பில்லிமலை, சின்ன கரும்பாலம் போன்ற பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் தேயிலை தோட்டங்கள் மற்றும் நீரோடை பகுதிகளில் முகாமிட்டுள்ளது.

இதனிடையே கிலண்டல் பகுதிக்கு வந்த ஒன்பது காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அங்கு வீட்டில் வளர்த்து வந்த பூச்செடிகள், வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் யானை கூட்டங்கள் .வருவதால் பொதுமக்கள். குழந்தைகள் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் தெருவிளக்குகள் போட்டு தர வேண்டும். ஏனென்றால் காட்டுயானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் நிற்பதால் வெளியே வரும் மக்களை தாக்கக்கூடும் எனவே தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .

இருப்பினும் அப்பகுதியில் வாழை மரங்கள் அதிகம் காணப்படுவதால் யானைகள் வாழை மரங்களை முழுவதுமாக சேதப்படுத்துகிறது. இதனை தொடர்ந்து தேயிலை தோட்டம் வழியாக கரும்பாலம் பகுதிக்கு சென்ற யானைகளை கண்டு தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

https://vimeo.com/699681316

யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வந்தாலும், தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளை தேடி முகாமிட்டு, பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

  • Pa Ranjith Isai vaniஐயப்பனை இழிவுப்படுத்திய பா. ரஞ்சித், இசைவாணி : வெளியான வீடியோ.. வலுக்கும் எதிர்ப்பு!
  • Views: - 1352

    0

    0