பிப்.19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவிப்பு : தமிழக அரசு உத்தரவு

Author: kavin kumar
9 February 2022, 9:30 pm

சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- : வரும் 19 ம் தேதி 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், மற்றும் பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை அடுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குபதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 19 ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1246

    0

    0