‘திமிரு புடிச்சவன்’ பட பாணியை கையில் எடுத்த காவல்துறை : தூத்துக்குடியில் சுவாரஸ்யம்!
Author: Udayachandran RadhaKrishnan21 January 2025, 3:19 pm
தூத்துக்குடியில் நடிகர் விஜய் ஆண்டனியின் திரைப்பட பாணியில் முத்தையாபுரம் காவல்துறை செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலை நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சாலை பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்பட்டு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படியுங்க: திடீரென சரிந்த கான்கிரீட் வீடு.. வைரலான வீடியோ.. கோவை மாநகராட்சி கூறுவதென்ன?
இந்த சாலையை சீரமைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையம் சார்பில் காவல்துறையினர் விபத்துகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் கற்கள் மற்றும் மணல் சிமெண்ட் கலவை ஆகியவற்றை போட்டு சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
காவல்துறையினரின் இந்த சேவையை பார்த்து அந்தப் பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் அவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்
நடிகர் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் விஜய் ஆண்டனி பொதுமக்களுக்கான சேவைகளில் ஈடுபடுவார்.
அதே போன்று தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் துறையினர் இந்த சேவையில் ஈடுபட்ட சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே நெகிழ்சியை ஏற்படுத்தி உள்ளது