வீட்டிற்குள் வளர்க்கப்படும் செடிகள்… பொதுமக்கள் வரவேற்பு : ரூட் ரிதாம்ஸ் நிர்வாகிகள் பெருமிதம்!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2025, 3:44 pm
கோவையில் பல்வேறு கடைகளில் வீட்டிற்கு உள்ளே வளர்க்கும் செடிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த வகை செடிகள் சின்கோனியம் ஸ்நேக் பிளான்ட் சர்கிலண்ட் கேக் டேஸ், மணி பிளான்ட், பீஸ் லில்லி ஆகிய செடிகளாகும்.
இதையும் படியுங்க: பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?
இந்த வகை செடிகள் சிறிய ரப்பர் பானையில் வைக்க பட்டு வளர்க்கப்படுகிறது. இந்த ரப்பர் பானைகளில் வெளியே அழகிய ஓவியங்களும் இடம்பெறுகின்றன.

இவை 150 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது இதனை பலரும் விரும்பி வாங்கி செல்கின்கின்றன. இது பொதுமக்கள் இடையே இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதுமட்டுமின்றி இவை கிஃப்ட் பொருட்களாகவும் வீடு அழகு சாதனமாகவும் இது வைக்கப்படுகிறது.. இது போன்ற இன்டோர் ப்ளான்ஸ் விற்பனையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கல்லூரி மாணவிகள் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கும் வாழ்வாதாரத்தை ஈட்டி வருகிறது.
வீட்டுக்குள்ளே வைக்கப்படும் செடிகள் நல்ல புத்துணர்வு தருவதோடு பாஸிட்டிவ் எனர்ஜி தரும் என ரூட் ரிதாம்ஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.