புதுச்சேரியில் கேட் வாக் போட்டி… ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த அழகிகள்!!

Author: Babu Lakshmanan
25 December 2023, 5:55 pm

புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் நடைபெற்ற கேட் வாக் அழகிகள் போட்டியில் வண்ண ஆடைகள் அணிந்து ஒய்யார நடை நடந்து வந்தது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே தனியார் அமைப்பு சார்பில் டிசைனர் கேட் வாக் ஷோ நடைபெற்றது. இப்போட்டியில் பெங்களூர், புதுவை மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாடல் அழகிகள் கலந்து கொண்டு வண்ண வண்ண ஆடைகள் அணிந்து விதவிதமான ஸ்டைலில் ஒய்யாரமாக நடந்து பார்வையாளர்களை கவர்ந்தனர்.

தனிச்சுற்று, இரட்டையர் சுற்று, குழு என மூன்று சுற்றாக நடைபெற்ற கேட் வாக்கில் பாரம்பரிய உடை, மாடலிங் உடை, என வண்ண வண்ண ஆடைகள் அணிந்து அழகிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடந்து தங்களது அழகையும் நளினத்தையும் வெளிப்படுத்தி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்கள். மேலும், அழகிகளுக்கு இணையாக ஆணழகன்களும் கலந்து கொண்டு கேட் வாக் செய்து பார்வையாளர்களை அசத்தினார்கள்.

கடற்கரை சாலையில் நடைபெற்ற கேட் வாக் போட்டியை புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

மேலும் அழகி போட்டியில் கலந்து கொண்ட மாடலின் அழகிகள் மற்றும் ஆணழகன்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் பரிசுகள் மற்றும் விருதுகளும் வழங்கும் கௌரவிக்கப்பட்டது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ