துணிவில்லாத கட்சி திமுக.. சுயேட்சை எம்எல்ஏ விளாசல்!

Author: Hariharasudhan
5 March 2025, 1:48 pm

பாஜக கூட்டணி அரசை எதிர்க்க துணிவில்லாத எதிர்​கட்​சியாக புதுச்சேரியில் திமுக உள்ளது என சுயேட்சை எம்எல்ஏ விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதியின் சுயேச்சை எம்எல்ஏ நேரு என்கிற குப்புசாமி. இவர் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனர் ஆவார். கடந்த 2011ஆம் ஆண்டில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் இவர்.

அப்போது அரசு கொறடாவாக 5 ஆண்டு காலம் இருந்த நிலையில், அடுத்த தேர்தலில் அதே தொகுதியில் நின்று தோல்வியுற்றார். பின்னர், 2021ல் என்.ஆர்.காங்கிரசை விட்டு விலகி சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற நேரு, ரங்கசாமி முதலமைச்சராக வருவதற்கு ஆதரவளித்தார்.

ஆனால், முதல்வர் ரங்கசாமியை ஆதரித்தாலும் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். இதற்கு சான்றாக, சமீபத்தில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்​துக்கு எதிராக நம்பிக்கை​யில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் அளித்தார்.

Puducherry Independent MLA Nehru Kuppusamy about DMK Stands in state

இந்த நிலையில், இது தொடர்பாக பிரபல தனியார் நாளிதழிடம் பேசிய நேரு, “நான் ரங்கசாமிக்​குத்தான் ஆதரவு அளிக்​கிறேன். ஆளும் அரசுக்கு கிடையாது. பாஜகவுடன் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி வைத்தது பிடிக்​காமல்தான் நான் சுயேச்​சையாக போட்டியிட்​டேன்.

இதையும் படிங்க: சிறுத்தை புகுந்ததால் பரபரப்பு.. கோவை பாரதியார் பல்கலை.,க்கு விடுமுறை : தேடும் வனத்துறை!

தேர்தலில் வெற்றி​ பெற்ற ரங்கசாமி, கொரோனாவால் பாதிக்​கப்​பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்​தார். அந்த நேரத்தில் பாஜகவைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்ச​ராக்க சதி நடந்தது. அதற்கு சுயேச்சைகள் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு அளித்​தனர்.

அந்த நேரத்தில் நான் ரங்கசாமிக்கு ஆதரவளித்து பாஜக முதலமைச்சர் வருவதைத் தடுத்​தேன். நான் சேவை செய்யவே அரசியலுக்கு வந்தேன். ஆளும் அரசை எதிர்ப்​பதால் எந்த வித ஆதாயமும் எனக்கு கிடையாது. தமிழகத்தில் திமுகவினர் பாஜகவை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்கின்​றனர். ஆனால் இங்கு, பாஜக கூட்டணி அரசை எதிர்க்க துணிவில்லாத எதிர்​கட்​சியாக திமுக உள்ளது. இங்குள்ள ஆட்சிக்கு எதிர்க்​கட்சி தான் முட்டுக்​கொடுத்துக் கொண்டு நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!
  • Leave a Reply