‘கடற்கரைகளில் யாராவது மது அருந்தினால் தகவல் கொடுங்க’: புதுச்சேரி காவல்துறை அதிகாரி மீனவர்களுக்கு வேண்டுகோள்..!!

Author: Rajesh
27 March 2022, 5:32 pm

புதுச்சேரி: கடற்கரைகளில் மது அருந்தினால் உடனடியாக காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படி காவல் துறை – மீனவ பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற நல்லுறவு கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கேட்டு கொண்டார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர்-மீனவ பிரதிநிதிகள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு (பொறுப்பு) முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமை தாங்கினார். இதில் ஆய்வாளர் கார்த்திகேயன், சார்பு ஆய்வாளர்கள் சிவபிரகாசம், முருகன், ஜான் பிரேரா ஆகியோரும், புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மினவ கிராமங்களான குருசுக்குப்பம், சோலைநகர், வைத்திக்குப்பம், கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநதிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா, மீனவ கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவ கிராமங்களில் உள்ளூர் பஞ்சாயத்துக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் கடலோர பகுதிகளில் மது அருந்தக்கூடாது, யாராவது மது அருந்தினாலும், கடலோரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

மேலும் மீனவ பிரதிநிதிகளும் தங்களுக்கு ஏற்ப்பட்டும் சில பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் போலீசாரிடம் தெரிவித்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி