‘அந்த’ ஒரு மணி நேரத்தில் நடந்தது என்ன? புதுக்கோட்டை நர்சிங் மாணவி மர்ம மரணம்!

Author: Hariharasudhan
28 December 2024, 11:28 am

புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வந்து உள்ளார். இந்த நிலையில், இப்பெண் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி காணவில்லை என பெற்றோர், வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண், அந்த கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்து உள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், இந்த விவகாரம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்கள் சடலத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி உள்ளனர். மேலும், இது குறித்து பெற்றோர் கூறுகையில், “கடந்த 25ஆம் தேதி அன்று, நாங்கள் துக்க நிகழ்வு ஒன்றிற்காக வெளியில் சென்றுவிட்டோம்.

Pudukkottai nursing student death

பின்னர், போனில் எனது மகளைத் தொடர்புகொண்டோம். அப்போது, நானும், தம்பியும் தக்காளிச் சோறு சமைத்து சாப்பிட்டதாக எனது மகள் கூறினார். பின்னர், சிறுது நேரம் கழித்து, அப்பா உனக்கு நூடுல்ஸ் வாங்கி அனுப்புகிறார், வாங்கிக்கொள் எனக் கூறினோம். அதற்கு அவள், சரி என்றாள்.

இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!

பின்னர், கடைசியாக இரவு 7 மணிக்கு பேசினோம். இதனையடுத்து, சிறிது நேரத்தில் கால் செய்த போது, அவர் போனை எடுக்கவில்லை. எனவே, 8 மணிக்கு வந்து பார்த்தபோது, எனது மகளை வீட்டில் காணவில்லை. இரவு முழுவதும் தேடி, மறுநாள் (டிச.26) வடகாடு காவல் நிலையத்தில் புகாரளித்தோம்” எனத் தெரிவித்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!