அங்கன்வாடி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்… தாய்மார்கள் காயம்..!!
Author: Babu Lakshmanan19 July 2023, 7:59 pm
புதுக்கோட்டை அருகே அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை எடுத்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள், இரண்டு தாய்மார்கள் அடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி நகராட்சி அலுவலகத்திற்கு அருகே தமிழக அரசின் குழந்தைகள் நல மையம் என்று கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த குழந்தைகள் மையத்தில் 20 குழந்தைகளும். 9 மாதம் 12 மாத தடுப்பூசிகளை போடுவதற்காக 15 குழந்தைகளும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 11:30 மணியளவில் பணியாளர்கள் அங்கன்வாடி மையத்தில் பணி செய்து கொண்டிருந்த பொழுது, மையத்தின் மேற்கூரையானது திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் இரண்டு குழந்தைகள் உட்பட தாய்மார்கள் சுமார் ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டு வந்து அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மையத்தை பார்வையோடு வந்த அரசு அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு மையத்தை எடுத்துவிட்டு புதிய அங்கன்வாடி மையம் கற்றுத் தர வேண்டும் என்றும், அடிபட்டவர்களுக்கு உயர்ந்ததாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.