திருமண விழாவில் பாரம்பரிய நாட்டுமாடு கண்காட்சி ; மண் மனம் மாறாத பொறியாளரின் செயல்… குவியும் பாராட்டு..!!!

Author: Babu Lakshmanan
25 February 2023, 10:01 am

புதுக்கோட்டையில் திருமண விழாவில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடந்த நாட்டு மாடு கண்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவகங்கை மாவட்டம் பொன்னடபட்டியை சேர்ந்த பொறியாளர் சரவணன் – சரண்யா தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரியம் மிக்க நாட்டு மாடுகள் இடம்பெற்ற கால்நடை கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில் நாட்டுமாடு வகைகளான புளிகுளம் காளை, காங்கேயம் காளை, குரால், செவலை என ஜல்லிகட்டு காளைகளும், ரேக்ளா ரேஸ் காளை, சண்டை கிடாய், வண்டி மாட்டு வகைகள் இடம்பெற்றது. திருமண விழாவிற்கு வந்தவர்களை கவர்ந்தது.

திருமண விழாவிற்கு வந்தவர்களை வரவேற்க வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் மாப்பிள்ளை பெண் புகைப்படம் இடம்பெறாது, தங்களின் வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளை புகைப்பட மட்டும் இடம்பெறும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தது காண்பவரை வெகுவாக கவர்ந்தது.

மேலும், திருமணத்திற்கு வந்தவர்கள் காளைகளுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!