4 நாட்களாக முடங்கிக் கிடக்கும் அரசு கேபிள் டிவி சேவை ; பொதுமக்கள் அதிருப்தி… ஆட்சியர் அலுவலகம் முன்பு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்!!
Author: Babu Lakshmanan22 November 2022, 1:32 pm
புதுக்கோட்டை ; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த நான்கு தினங்களாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்குவதற்காக தமிழக அரசு, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தொடங்கியது. இதன் மூலமாக தமிழக முழுவதும் ஆயிரக்கணக்கான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து லட்சக்கணக்கான இணைப்புகள் பெற்று பொதுமக்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் இல் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தனது 4 தினங்களாக தமிழக முழுவதும் அரசு கேபிள் டிவி சேவையானது பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் 63,000 இணைப்புகள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை கடந்து பெறப்பட்டு பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். இதில், பெருமளவு சேவை பாதிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் பல்வேறு பிரச்சனைகள் செய்து வருவதால், உடனடியாக தமிழக அரசு கேபிள் டிவியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சீர் செய்ய வேண்டும் என்று கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் புரிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, அவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தாசில்தாரிடம் தங்களுடைய மனுவை கொடுத்துச் சென்றனர். ஏற்கனவே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.