‘வருமானமே போனாலும் பரவால… அந்த மனுசனுக்காக கடையை அடைக்காலம்’ ; கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி
Author: Babu Lakshmanan29 December 2023, 4:38 pm
புதுக்கோட்டை – விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வணிக கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் மட்டுமல்லாது தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வணிக கடைகளை அடைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
லட்சக்கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டாலும், நல்ல மனிதருக்காக அஞ்சலி செலுத்துவதில் தவறில்லை என்று கூறி அந்த கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.