புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி பகுதியை சேர்ந்தவர் ஜான்(37) இவர் பேக்கரி ஒன்றில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வல்லவாரி கடைவீதியில் உள்ள மீனாட்சி உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளார். அப்போது ஜான் ஆம்லெட்டு கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து, ஜான் உணவகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜான் தனது சகோதரர் டேவிட் (34) உள்ளிட்ட 7 பேரை அழைத்துக் கொண்டு நேற்று இரவு மீண்டும் உணவகத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் உணவகத்தில் இருந்தவர்களை பீர் பாட்டில்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் அவ்வழியாக சென்ற பிரபு (24) உள்ளிட்டோர் சண்டையை தடுக்கச் சென்றுள்ளனர். அதனையடுத்து சண்டை திசைமாறி தடுக்கச் சென்ற பிரபுவை ஜான், டேவிட் கும்பல் கல்லால் தாக்கி முகத்தை சிதைத்துள்ளனர். மேலும் நெஞ்சு பகுதியில் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பிரபு இரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார்.
மயங்கிய பிரபுவை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். அதனையடுத்து பிரபுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்லெட்டு கேட்டு ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.