குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீயை விழுங்கி விநோதம் : ஆலங்குடி அருகே கிராம மக்களின் வழிபாடு..!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 11:36 am

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மேலப்புள்ளான் விடுதியில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மேலப்புள்ளான் விடுதியில் கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு கற்பக விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, விநாயகருக்கு பிடித்தமான அவல்பொரி கடலை எள்ளுருண்டை அப்பம், கொழுக்கட்டை, பொங்கல், சுண்டல் போன்ற பதார்த்தங்களை செய்து விநாயகருக்கு படையல் போட்டு வழிபாடு செய்யப்பட்டது.

அப்போது, சிறப்பு வழிபாடாக மாவிளக்கில் திரியை வைத்து, அதில் தீயை பற்ற வைத்து மா விளக்குடன் தீயை விழுங்கும் வினோத வழிபாடு நடைபெற்றது. இதில், ஆண்கள், பெண்கள் ,குழந்தைகள் என 50க்கும் மேற்பட்டோர் தீயை விழுங்கி வழிபாடு செய்தனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 586

    0

    0