குடிபோதையில் மனைவி அடித்தே கொலை… பயத்தில் கணவன் செய்த காரியம் ; புதுக்கோட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
5 September 2023, 5:40 pm

புதுக்கோட்டை அருகே குடும்ப தகராறு குடிபோதையில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (34). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நித்திய காமாட்சி என்பவருக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், குடிபோதையில் மனைவியை சந்தேகப்பட்டு பால்ராஜ் அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். நேற்று இரவு குடிபோதையில் மனைவியிடம் பால்ராஜ் தகராறு செய்து மனைவியை குடிபோதையில் கீழே தள்ளி உள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த நித்திய காமாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து, அவரும் அரிவாளால் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மயக்கமிட்டார். இதனை தொடர்ந்து, அக்கம்பத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இறந்த நித்தியா காமாட்சியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அன்னவாசல்
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 385

    0

    0