பொறுத்திருந்து பாருங்கள்!!, கொடநாடு கொலை வழக்கில்… சஸ்பென்ஸ் வைத்த புகழேந்தி..!!
Author: Babu Lakshmanan9 July 2022, 9:36 am
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
ஒற்றை தலைமை விவகாரம் எழுந்ததால், அதிமுக மீண்டும் இரு அணிகளாக பிளவுபட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவுக்கு தலைமை ஏற்க எடப்பாடி பழனிசாமி முனைப்பு காட்டி வரும் நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் விதமாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுக்குழு நடைபெறும் 11ம் தேதியே தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்திடம் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பொறுத்திருந்து பாருங்கள். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொலையாளிகளும், கொள்ளையாளர்களும் வெளியே தெரிய வருவார்கள். நெடுஞ்சாலை துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கி வைத்திருந்தார்.
தற்போது வருகின்ற திங்கள்கிழமை காலை வழக்கு நீதிமன்றத்திற்கு வர உள்ளது. விரைவில் எடப்பாடி பழனிசாமியை சிபிஐ விசாரிக்க நேரிடும். பொதுக்குழு தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கிறோம். அன்பே, அண்ணனே நீங்கள் ஒருகிங்கிணைப்பாளர் இல்லை, நான் இணை ஒருங்கிணைப்பாளர் இல்லை என கடிதம் எழுதினார். இன்று அதெல்லாம் நாடகம் என்று நிரூபணமாகியிருக்கிறது, எனக் கூறினார்.