பொன்முடிக்கு தண்டனை.. இருளில் மூழ்கிய கிராமங்கள்.. வெறிச்சோடிய திமுக அலுவலகங்கள் : பிரதமருக்கு எதிர்ப்பு…விழுப்புரத்தில் மக்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
22 December 2023, 8:50 am

பொன்முடிக்கு தண்டனை.. இருளில் மூழ்கிய கிராமங்கள்.. வெறிச்சோடிய திமுக அலுவலகங்கள் : பிரதமருக்கு எதிர்ப்பு…விழுப்புரத்தில் மக்கள் அவதி!!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி பொன்முடிக்கு நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட இருந்தன.

அதனை ஒட்டி ஏராளமான திமுக தொண்டர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள திமுக கட்சி அலுவலகத்தில் கட்சியினர் எப்பொழுதும் போல இருந்தனர் பின்னர் தீர்ப்பளிக்கும் நேரத்தில் விழுப்புரம் நகரத்தில் பல இடங்களில் அரை மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் தீர்ப்பு அளித்தார். மேல் முறையீடு செய்வதற்காக தண்டனை 30 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.

இதனையடுத்து திமுக அமைச்சர் பொன்முடியின் வீடு பூட்டப்பட்டுள்ளது. ஒரே ஒரு காவலர் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விழுப்புரம் திமுக கட்சி அலுவலகத்தில் கட்சித் தொண்டர்கள் எப்போதும் கூட்டமாக காணப்படும். ஆனால் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் திமுக கட்சியினர் மோடிக்கு எதிராக ரூ.75 லட்சம் கோடி ஊழல் உள்ளதாக ஆங்கிலத்தில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது. இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!