எனக்கு எதிராவே கட்சியில் நோட்டீஸ் ஒட்டறாங்க.. காங்.,மீது எம்பி கார்த்தி சிதம்பரம் கொதிப்பு?
Author: Udayachandran RadhaKrishnan26 February 2024, 11:11 am
எனக்கு எதிராவே கட்சியில் நோட்டீஸ் ஒட்டறாங்க.. காங்.,மீது எம்பி கார்த்தி சிதம்பரம் கொதிப்பு?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வப் பெருந்தகை பதவி ஏற்றதற்கு நேரில் சென்று வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன்.
மேலும் வரும் பாராளுமன்றத் தேர்தலில் அவருடன் சேர்ந்து இந்திய கூட்டணி போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்து இருப்பது துரதிஷ்டமானது இந்த கட்சியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக ஆகி உள்ளார். கட்சியிலிருந்து சென்றது வருத்தம் அளிக்கிறது.

சிவகங்கை தொகுதி கூட்டணி கட்சியில் தலைமையிடம் அறிவித்தால் அதில் சிவகங்கை தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதியிலும் இந்திய கூட்டணி அணி அமோக வெற்றி பெறும்.பாராளுமன்ற உறுப்பினராக ஆனதிலிருந்து பல்வேறு பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களுக்கு தேவையானது செய்து வருகிறேன் எனக்கு ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை உள்ளது அதனால் நான் அனைத்து கோயில்கள் சென்று வழிபாடு செய்து வருகிறேன் என கூறினார்.