லாட்ஜில் ரூம் போட்டு ‘வடிவேலு பட பாணியில் திருட்டு’ : பல நாள் கைவரிசை காட்டிய பலே திருடன் சிக்கினான்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2023, 5:55 pm

சிவகங்கை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 33). இவர் கோவை 100 அடி சாலையில் உள்ள தனியார் லாட்ஜில் ரூமெடுத்து வசித்து வருகிறார்.

இவர் காந்திபுரம் கவுண்டம்பாளையம், வடவள்ளி, சிவானந்த காலனி, ஆர் எஸ் புரம் போன்ற பகுதிகளில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொண்டு பில் போடும் நேரத்தில் காசை மறந்து வைத்து வந்து விட்டேன், காசு தனது வாகனத்தில் உள்ளது தற்போது அடுத்து வருகிறேன் எனக் கூறி பில் போடப்பட்டு கொண்டிருக்கும் அந்த சிறு இடைவேளையில் அங்குள்ள செல்போன் உள்ளிட்ட விலைமதிப்பான பொருட்களை திருடி அதனை விற்று பணத்தை சேமித்து வந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் இன்று ஒரு கடையில் அவர் இதே போல் செய்தது அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி யில் பதிவாகி இருந்துள்ளது.

காந்திபுரம் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு சென்று பொருட்களை வாங்குவது போல் செல்போன் ஒன்றை திருடியதாக தெரிகிறது.

இதனை அடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அவரை தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் செல்போன் விற்ற கடைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.வடிவேல் பட பாணியில் கடை உரிமையாளரிடம் நன்கு பேசி பொருட்களை வாங்கிவிட்டு அதற்கு பில் போடும் நேரத்தில் சட்டென பொருட்களை திருடிக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 352

    0

    0