பேருந்திலும் QR SCAN வசதி : சில்லறை தட்டுப்பாட்டை போக்க கோவையில் அறிமுகம் செய்தது தனியார் பேருந்து!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2023, 11:53 am

கடைகள், ஓட்டல்கள், வங்கிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கியூஆர் கோர்டு வசதி இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் இயங்கி வரும் தனியார் பஸ் ஒன்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள் பல்வேறு தடங்களில் நிற்காமல் சென்றாலும் தனியார் பேருந்துகள் மக்களை நின்று ஏற்றி வருவதால் என்னைக்குமே தனியார் பேருந்துகளின் மீது மக்களுக்கு ஒரு ஆர்வம் உண்டு.

டிக்கெட் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் சரியான நேரத்திற்கும் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் தனியார் பேருந்துகளில் ஏற்றி செல்வதால் பெரும்பாலானோர் இன்று தனியார் பேருந்தையே நம்பி இருக்கின்றனர்.

அந்த வகையில் 63 – ஜெயசக்தி தனியார் பேருந்தில் க்யூ ஆர் ஸ்கேன் வசதி மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது இந்த நடைமுறை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தற்பொழுது நாடு முழுவதும் டிஜிட்டல் மையம் ஆக்கப்பட்டு டிஜிட்டல் பரிவர்த்தனை தான் அனைத்து பகுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.காய்கறி கடை ,முதல் பழக்கடைகள் , டீக்கடை , வங்கிகள், சாலையோரம் இருக்கக்கூடிய சிறிய உணவகங்கள் முதல் பெரிய உணவகங்கள் வரையிலும் ,அதே போல விமான டிக்கெட், ரயில் டிக்கெட் , ஒரு பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்வது முதல், திரும்பும் பகுதி எல்லாமே qr ஸ்கேன் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது

இதனால் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை தட்டுப்பாடு என்பது முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் கோவையை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனம் ஒன்று பயணிகள் டிக்கெட் எடுக்க கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் சார்பில் வடவள்ளி-ஒண்டிப்புதூர், ஒண்டிப்புதூர்-வடவள்ளி, சாய்பாபா காலனி, கீரணத்தம்-செல்வபுரம், மதுக்கரை-ஒண்டிப்புதூர் ஆகிய வழித்தடங்களில் 5 நகர பஸ்களை இயக்கி வருகிறது.

இந்த 5 பஸ்களிலுமே பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கான கியூஆர் கோர்டு வசதியை அறிமுகம் செய்துள்ளனர். இதன் மூலம் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எவ்வளவு டிக்கெட் என்பதை நடத்துனரிடம் கேட்டு, கியூஆர் கோடு மூலம் அந்த பணத்தை செலுத்தி கொண்டு தங்கள் பயணத்தை தொடரலாம்.

3 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, அந்த பஸ்களில் பயணிக்க கூடிய பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பெரும் பிரச்சினையான சில்லறை பிரச்சினை என்பது குறைந்து விட்டது.

பஸ்களில் சில்லறை பிரச்சினை என்பது எப்போதும் வரக்கூடியது தான். இதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்த போது தான், கடைகளில் பொருட்களை வாங்கி விட்டு பணம் செலுத்துவதற்கு கியூஆர் கோடு வசதி உள்ளது போல பஸ்களிலும் அறிமுகப்படுத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.

உடனே ஒரு சாப்ட்வேரை உருவாக்கி அதன் மூலம் புதிய கியூஆர் கோர்டு ஒன்றை செய்து, எங்கள் நிறுவனம் சார்பில் இயங்கும் 5 பஸ்களிலும் ஒட்டினோம். இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் டிக்கெட்டுக்காக இனி கையில் காசு கொடுக்க வேண்டாம்.

பஸ்சில் உள்ள கியூஆர் கோர்டை பயன்படுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். இவர்கள் பணம் செலுத்தியதற்கான குறுஞ்செய்தி கண்டக்டருக்கு சென்று விடும். இதற்கு என அவருக்கு ஒரு செயலி அவரது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

டிக்கெட்டுக்கான பணம் செலுத்தியவர்கள் அந்த மெசேஜை காண்பித்து டிக்கெட் பெற்று பயணிக்கலாம். இதன் மூலம் சில்லறை பிரச்சினை என்பது குறைந்துள்ளது. மேலும் நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள இந்த கியூஆர் கோர்டு வசதிக்கு பயணிகளிடமும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

  • DSP Removed From Good Bad Ugly Movie கங்குவா தோல்வியால் அஜித் படத்தில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கம்? இணையும் பிரபலம்!
  • Views: - 464

    1

    0