அமைச்சர் பொன்முடி குறித்து கேள்வி… அண்ணாமலை உதவி செய்ய அமைச்சர் செஞ்சி மஸ்தான் கோரிக்கை!!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2023, 1:23 pm
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு சிறப்புகள் பற்றிய பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்பொழுது பேசிய அவர், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டத்தை சட்ட ரீதியாக சந்திக்க எந்த காலத்திலும் பின் வாங்கியது இல்லை.
இதை கடந்த கால திமுக வரலாற்றில் பார்த்திருப்பீர்கள் அமைச்சர் பொன்முடி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.
அதேபோல் இதையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம், விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளையும் குறைக்க மோடி இடம் பேசி அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.