தமிழகம்

மகனை வைத்து மழைக்கு அறிக்கை.. ஆர்.பி.உதயகுமார் விளாசல்!

வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுக அரசு செயலிழந்து விட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை: மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றியத்தில் உள்ள ரெங்கராஜபுரம், அரியூர், வயலூர்,பொதும்பு மற்றும் சமயநல்லூர் ஆகிய பகுதிகளில் அதிமுக உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்குவதை ஆய்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்டப் பொறுப்பாளர் தண்டரை மனோகரன் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். இந்த பருவமழை நமக்கு வரப் பிரசாதம். இந்தப் பருவ மழையில் நாம் நீரை சேமித்து வைக்கலாம்.

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின்பு அரபிக்கடல், வங்கக் கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அது புயல் சின்னமாக மாறி உள்ளது. இதன் காற்று வேகம் 55 கிலோமீட்டர் ஆகும். அதேபோல், வட தமிழ்நாடு கடற்கரைகளில் 60 கிலோ மீட்டர் சூறாவளி காற்று வீசும். தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. மதுரை மாட்டுத்தாவணியில் கடந்த இரண்டு நாட்களாக மழை தேங்கியுள்ளது. அதை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சேலத்தில் பேருந்து நீரில் மூழ்கிவிட்டது. வடகிழக்கு பருவமழை ஆய்வுக் கூட்டத்தை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், தயார் நிலையில் இருக்கிறோம் என்று பேட்டி கொடுத்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. உதயநிதி அறிக்கையில் பெரிய முரண்பாடு உள்ளது. இது போன்ற காலங்களில் நிவாரண முகாம்கள், மருத்துவ முகாம்கள், உணவு, தேசிய மீட்புப் படை ஆகியவை தயாராக உள்ளதா? மாநில மீட்புப் படையை ஜெயலலிதா,எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உருவாக்கினார்கள், அது தயார் நிலையில் உள்ளதா?

இப்போது கூட மதுரையின் மையப்பகுதியில் மூன்று நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளது. அதை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து ஓடுகிறது. நீர் வரத்து கால்வாயை சீர் செய்யவில்லை. இதே எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நீர்வரத்து பகுதிகளில் தூர்வாரினோம். குறிப்பாக 1 லட்சத்து 10 ஆயிரம் சிறுபாலங்களை சீர் செய்ததால் அடைப்பு இல்லாமல் நீர் எளிதாக வெளியேறியது.

இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் இல்லாமல், துறை அமைச்சர் இல்லாமல் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளார். இதே போல தான் கடந்த காலங்களில் வீர வசனம் பேசினார்கள். முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்காமல் தோற்றுப் போனார்கள். இன்றைக்கு அரசு செயல் இழந்து முடங்கிப் போய் உள்ளது. இந்த பருவமழையில் மின்சாரம் தாக்கி ஐந்து பேர் உயிரிழந்ததாக செய்தி வருகிறது.

பொதுவாக இந்த வடகிழக்கு பருவமழையில் உயிரிழப்பு இல்லாமல் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்று கூறுகிறார், இதில் எந்த உயிரிழப்பும் இல்லாமல் பாதுகாப்பாக எதிர்கொள்ள வேண்டும். இன்றைக்கு சினிமாவில் உள்ளது போல சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பதவிக்கு வந்து பேட்டி கொடுக்கிறார்.

தற்போது தான் நீரை உறிஞ்சும் வாகனங்கள் செல்கிறது. நீர் நிலைகளை, கண்மாய் கரைகளை, நீர் குட்டைகளை ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்து மூத்த அமைச்சர்கள் ஆய்வு செய்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், மூத்த அமைச்சர்களை புறக்கணித்துவிட்டு முதலமைச்சரும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அறிக்கை, பேட்டி கொடுக்கிறார்கள். கடந்த மழையில் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

இன்றைக்கு அரசு மட்டுமல்லாது, திமுகவினரும் இதில் இறங்க வேண்டும் என்று திமுக கூறுகிறது. எல்லா கட்சிகளும்தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்கள். கடந்த மழையில் சென்னை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டபோது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி.

இதையும் படிங்க : உஷார் மக்களே.. சென்னையில் தொடரும் மழை.. வானிலை மையம் கடும் எச்சரிக்கை!

ரூ.5,000 கோடி அளவில் மழைநீர் வடிகாலை முடித்துவிட்டோம் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு சென்னையில் மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் உள்ளது. இன்றைக்கு தமிழகமே வடகிழக்கு பருவமழையால் தத்தளிக்கிறது. இதை காப்பாற்றாமல் அரசு செயல் இழந்துவிட்டது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு மக்களுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

9 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

10 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

10 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

11 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

11 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

11 hours ago

This website uses cookies.