ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம்.. திடீர் ரெய்டு.. சிக்கும் மேலும் ஒரு அதிகாரி? கோவையில் லட்சக்கணக்கான பணம் சிக்கியதா?
Author: Udayachandran RadhaKrishnan23 April 2022, 2:10 pm
கோவை போக்குவரத்து துறை இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக போக்குவரத்து துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை கைப்பற்றி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து துறை இணை ஆணையர் உமாசக்தி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை எண்ணும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் விடுமுறை தினங்கள் காரணமாக வெளியார் செல்லும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து கோவை சரகத்தில் 2 பேருந்துகளை ஆய்வு செய்து, அவற்றை பறிமுதல் செய்து உமாசக்தி நடவடிக்கை மேற்கொண்டிருந்தார். இந்த பேருந்துகளை விடுவிக்கவும், மேலும் பல்வேறு பணிகளுக்காகவும் உமாசக்தி லஞ்சம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
0
0