பழனியை தனி மாவட்டமாக உருவாக்கும் முனைப்பில் அமைச்சர் சக்கரபாணி இருப்பதாக வெளியான தகவலுக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு அடிக்கடி வந்து முருகனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். இவ்வாறு அவர் வரும்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்கரபாணி.
எனவே, துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழனி தனி மாவட்ட கோரிக்கையை முடிக்க சக்கரபாணி காய் நகர்த்துவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதன்படி, பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி பழனியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து மெனக்கெட்டு வருவதாகவும் அவரது நலம்விரும்பிகள் கூறுகின்றனர்.
மேலும், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திண்டுக்கல் மாவட்ட திமுகவில் மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் அசைக்க முடியாக சக்தியாக உள்ளனர். எனவே, அவரை மீறி அங்கு சக்கரபாணியால் பெரிதாக செய்துவிடமுடியாது.
எனவே, பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கினால் மாவட்ட அமைச்சராக, தான் மட்டுமே அதிகாரத்துடன் இருக்கலாம் என நினைக்கிறார் சக்கரபாணி. ஆனால், கொங்கு மண்டலத்தில் வரும் மடத்துக்குளத்தையும், உடுமலையையும் தென்மாவட்ட சாயலைக் கொண்ட பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளையும் உள்ளடக்கி புதிய மாவட்டத்தை உருவாக்குவது சிக்கலை உருவாக்கும்” என்கின்றனர்.
மேலும், இது குறித்து அமைச்சர் சக்கரபாணி அளித்துள்ள தனி பேட்டியில், “பழனியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைப்பது என்பது முதலமைச்சரின் முடிவு. இது அரசின் கொள்கை முடிவாகக்கூட இருக்கலாம். புதிய மாவட்டம் அறிவிப்பு இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு என்னைப் பொறுப்பாளராக முதலமைச்சர் நியமித்தார்.
இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. எட்டிப் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம் : 7 வருடங்களுக்கு பின் சிக்கிய தம்பதி!
எனவே, ஈஸ்வரசாமியை வெற்றி பெற வைத்தோம். மாவட்டப் பிரிவினை தொடர்பாக நான் எந்த முனைப்பும் காட்டவில்லை. பலரும் பல விதமான யூகங்களைச் சொல்லத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொன்னால் தவறாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் படத்திற்கு ஏகப்பட்ட…
ரச்சிதா மகாலட்சுமியின் புதிய படம் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலின் மூலம் புகழைப் பெற்ற ரச்சிதா,பிக் பாஸ்…
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மகளிர்…
ராஜஸ்தானில், கள்ளக்காதலைப் பார்த்த கணவரை அடுத்து கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.…
தஞ்சை பட்டுக்கோட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர்:…
This website uses cookies.