ரெத்த வெள்ளத்தில் CSK வீரர்…பாகிஸ்தான் மைதானத்தில் நடந்த சோக சம்பவம்..!

Author: Selvan
9 February 2025, 7:04 pm

பலத்த காயம் அடைந்த ரச்சின் ரவீந்திரா

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா முகத்தில் பந்து பலமாக பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையும் படியுங்க: விட்டதை பிடித்த ‘தில் ராஜு’…திடீரென அடித்த லக்கால் நிம்மதி பெருமூச்சு..!

பாகிஸ்தானின் லாகூர் மைத்தனத்தில் பகல்,இரவு ஆட்டமாக தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 330 ரன்களை குவித்தது,அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது இரவு நேரம் ஆனதால் மைதானத்தில் போதிய லைட் வெளிச்சம் இல்லாமல் நியூ.வீரர்கள் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகினார்கள்.

Rachin Ravindra catch attempt injury

அந்த சமயத்தில் 38 வது ஓவரின் போது குஸ்தில் ஷா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயற்சி செய்த ரச்சின் ரவீந்திரா முயன்றார்,எல்லோரும் மிகவும் எளிதாக பிடித்து விடுவார் என எண்ணிய போது,பந்து கீழே வரும் போது போதிய வெளிச்சம் இல்லாததால் பந்து அவரது தலையில் பயங்கரமாக விழுந்தது.இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் மளமளவென வெளியேறியது,உடனே மைதானத்திற்குள் சென்ற மருத்துவக்குழு அவரை மீட்டு உடனடியாக முதலுதவி அளித்தார்கள்,பின்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றாலும் மைதானத்தில் நடந்த சோகமான சம்பவத்தால் ரசிகர்கள் உட்பட நியூ.வீரர்கள் மிகவும் அதிருப்தி ஆனார்கள்.இந்த சம்பவத்திற்கு முழு காரணம் சரியான பராமரிப்பு இல்லாத கிரிக்கெட் மைதானம் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக முன்வந்து இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.ரச்சின் ரவீந்திரா IPL தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்,அவருக்கு ஏற்பட்ட காயத்தால் தமிழக ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply