தமன்னாவை சுத்தி சுத்தி பாத்தும் கருப்பு இல்ல.. சர்ச்சையில் சிக்கிய ராதா ரவி.!

Author: Rajesh
29 June 2022, 4:37 pm

தி நைட்டிங்கேல் புரொடக்ஷன் தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் லீட் ரோலில் நடித்திருக்கும் நாயகி காவ்யா, நடிகர் ராதாவி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய நடிகர் ராதாரவி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தற்காக நன்றி தெரிவித்தார். நல்ல கதை மற்றும் கேரக்டர் என தெரிந்ததால் நடித்ததாக கூறிய அவர், கனல் படம் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசும்போது, ” நான் கன்னட படத்தில் தான் நடித்துக் கொண்டிருந்தேன். கமல் தான் என்னை முதன்முதலாக தமிழுக்கு அழைத்து வந்து மன்மதலீலை படத்தில் நடிக்க வச்சார். கமலுக்கு எவ்ளோ திறமை பாருங்க. இப்போது கூட நம்பர் ஒன் கலெக்ஷன் எடுத்தாரு பாருங்க அதுதான் திறமை. நானும் நானூறு படங்களில் நடிச்சிருக்கேன்.ஆனால் நானும் நடிப்பேனும் இன்னும் எல்லார்கிட்டயும் சொல்ல வேண்டியிருக்கு.

பெண்கள் என்னை திட்டினால் தான் எனக்கு சம்பளம். ஏனென்றால், குடும்பத்தை கெடுக்கிறேன். சிலரோட வாழ்க்கையை கெடுக்கிறேன். ஆனால் என்னை நடிகனாக அவர்கள் பார்க்கிறார்கள். நல்ல நடிக்கிறேன் என்று கூட சொல்கிறார்கள். அதுபோதும் எனக்கு. ஏர்போர்ட்டில் தமன்னாவை சுற்றி சுற்றிப் பார்த்தேன். ஒரு இடத்தில் கூட கருப்பு இல்லை. அதேமாதிரி இப்படத்தில் நடித்திருக்கும் காவ்யாவும் இருக்கிறார். பெரிய நடிகர்களுக்கு எல்லாம் சொல்லிக் கொள்கிறேன். என கூறினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ஒரு நடிகை உடலை பற்றி எப்படி பேசலாம் என்று ராதாரவிக்கு எதிராக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

  • ajith kumar video after accident viral on internet ஐயோ நம்ம அஜித்குமாரா இது? விபத்தில் சிக்கிய பின் வெளியான பதைபதைக்க வைக்கும் வீடியோ…