BIGG BOSS-ஐயும், காதலையும் நம்பி ஏமாறக் கூடாது… இளம்பெண்களுக்கு நடிகை ராதிகா சரத்குமார் அட்வைஸ்..!!

Author: Babu Lakshmanan
27 November 2023, 9:42 pm

இளம் பெண்கள் பிக்பாசிலும், கைபேசியிலும், காதலிலும் நம்பி மூழ்கி ஏமாறக் கூடாது என்று நடிகை ராதிகா சரத்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள நாராயணி மருத்துவமனையின் சார்பில் உலக நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் மருத்துவமனையின் இயக்குநர் பாலாஜி தலைமையில் நடந்தது இதில் சுகாதாரத்துறை உதவி இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழிப்புணர்வு விழாவை துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளான செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்மேலும் நீரிழிவு நோய் விழிப்புணர்வு கையேட்டினையும் நடிகை ராதிகா வெளியிட்டார்.

பின்னர் விழாவில் நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், “எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் பெண்கள், தங்கள் உடல்நலத்தின் மீது அக்கறை செலுத்துவதில்லை, எனவே, நீரிழிவு நோய் குறித்து பெண்கள் தங்களின் உடல் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும். ஏனென்றால் நாம் நன்றாக இருந்தால்தான், நம்மை சுற்றி இருப்பவர்களை நாம் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும்.

மேலும், தற்போது இளைஞர்களும், இளம் பெண்களும் கைபேசியில் மூழ்கி விடுகின்றனர். அதனை தவிர்க்க வேண்டும். மேலும், பிக்பாசை பார்க்கின்றனர். அதில் ஒருவரை ஒருவர் திட்டிகொள்வது தான் நடக்கிறது, மேலும், யாரையும் நம்பி கைபேசியில் பேசி, காதலில் மூழ்கி ஏமாறாதீர்கள்.

பெண்கள் சுய நலமற்றவர்கள் இருப்பினும் தங்களின் உடல் நலனிலும் அக்கறையை செலுத்த வேண்டும். மாதம் ஒரு முறையாவது ரத்தம் மற்றும் முழு உடற்பரிசோதனையை செய்து உங்களின் உடல் நலனில் அக்கறையை செலுத்துங்கள், என பேசினார்.

  • Vidamuyarchi total earnings worldwide போராடும் ‘விடாமுயற்சி’…இறுதி கட்டத்தை நோக்கி படத்தின் வசூல்.!
  • Close menu