என்ன ஆட விட்டு வேடிக்கை பாக்குறீங்களா : பல வருடங்களுக்கு பின் கமல்ஹாசன், ராதிகா நடனமாடிய வீடியோ வைரல்!
Author: Udayachandran RadhaKrishnan9 November 2022, 9:24 pm
தமிழ் சினிமாவில் உலக நாயகனாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது.
இவர் நேற்று முன்தினம் தனது 68 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும், இந்தியன் 2 படக்குழு படத்தின் போஸ்டரை வெளியிட்டு இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.
ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இவரின் கலைப்பயணத்தை பாராட்டி சமூக வலைதளத்தில் வாழ்த்தியிருந்தனர். இந்நிலையில், தனது நண்பர்களுக்கு இவர் பிறந்த நாள் பார்ட்டி கொடுத்துள்ளார்.
#Ulaganayagan @ikamalhaasan dancing for his song #PathalaPathala along with Mrs. @realradikaa on his birthday party ❤️👍🎂 happy to see him being happy he deserve all the love ❤️❤️❤️ pic.twitter.com/SsikEGews0
— Sankarganesh_Lovepeace🇮🇳MNM (@SankarganeshLo1) November 9, 2022
இந்த பார்ட்டியில் நடிகர் ராதிகா உட்பட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் நடிகை ராதிகாவுடன் பத்தல பத்தல பாடலுக்கு கமல் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.