ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்காததால் ஆத்திரம் : தடுப்புகளை உடைத்து பவுன்சர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 1:56 pm

ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்காததால் ஆத்திரம் : தடுப்புகளை உடைத்து பவுன்சர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதம்!

கோவை கொடிசியா மைதானத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் 40 ஆயிரம் பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் 500 ரூபாய் தொடங்கி 50 ஆயிரம் ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இந்நிலையில் 2000 தொடங்கி 5000 வரை விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வாங்கியவர்களுக்கு இருக்கை கொடுக்காததால் இசை நிகழ்ச்சியில் பவுன்சர்களுக்கும், ரசிகர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் முன்னேறி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் பவுன்சர்கள் ரசிகர்களை பின்னோக்கி தள்ளக்கூடிய காட்சிகள் பதிவாகி உள்ளது. மேலும் இசை நிகழ்ச்சி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ரசிகர்கள் மேடையின் அருகில் என்று இசை ரசிக்க ஆவலுடன் முன்னேறிச் சென்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

இசை நிகழ்ச்சியானது மாலை 7 மணி அளவில் தொடங்கியது, முதல் பாடலாக நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் ஓபனிங் சாங் பாடலான முன்னாள் முன்னாள் வாடா என்ற பாடலை பாடினார்.

பின்னர் இறுதிப் பாடலாக மறக்குமா நெஞ்சம் என்ற பாடலை பாடி நிறைவு செய்தார். மேலும் அரங்கத்தில் பேசிய ஏ ஆர் ரகுமான் மழை வரவில்லை நிகழ்ச்சி நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே! மேலும் சென்னையில் நிகழ்ச்சி நடக்காமல் இருந்தது வருத்தம் அளிக்கிறது, மீண்டும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்தார்.

மேலும் லாக்டவுன் இல்லாதது மகிழ்ச்சி எனவும் இந்த மாதிரி நிகழ்ச்சி எல்லாம் நடக்குமா என்ற எண்ணம் அப்போது இருந்தது ஆனால் நடக்கிறது எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று பேசினார்.

மேலும் நள்ளிரவு 11 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்றதால் கொடிசியா மைதானம் அருகே போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது.

  • Madhampatty Rangaraj Illegal Affairs கணவரை இழந்த நடிகைகளுடன் டேட்டிங் : பிரபலத்தின் அந்தரங்க லீலைகள் அம்பலம்!